மகாராஷ்ட்ராவில் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் போக்குவரத்து தொழிலாளர்கள் 26வது நாளாக போராட்டம்!
மகாராஷ்ட்ராவில் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் போக்குவரத்து தொழிலாளர்கள் 26வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆசாத் மைதானத்தில் தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடத்தினர். மும்பை போலீசார் போராடும் தொழிலாளர்கள் மழைக்கு ஒதுங்க இடம் அளித்துள்ளனர்.மும்பை, புனே போன்ற நகரங்களில் 85 சதவீதப் பேருந்துகள் முடங்கியுள்ளன.
சிறு கிராமங்களுக்கும் தொலைதூரங்களுக்கும் செல்லக் கூடியவர்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நிலைமையை சமாளிக்க மும்பையில் சுமார் 200 தனியார் பேருந்துகளை அரசு இயக்கி வருகிறது.
Comments